பின்லேடனை தத்தெடுத்த பாகிஸ்தான்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்

9.7.13

பாகிஸ்தானில் இருந்து புதிய அறிக்கை ஒன்று லீக் ஆகி உள்ளது.
அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைப் பகுதியில் இருந்து தப்பித்த பின்லேடன் 2002 இல் இருந்து பாகிஸ்தான் வந்து தங்கியிருந்ததாக பரபரப்பு தகவல்களை பாகிஸ்தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு பின்லேடன் அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின், பின்லேடனின் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்துள்ளனர்.
அடுத்த சில மாதங்களிலேயே பின்லேடனும் அவர்களுடன் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த தாக்குதல் ஒன்றில் கைதான அல்கயிதா இயக்கத்தை சேர்ந்த காலித் பின் அட்டாசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துக்கள் :