ஆபாசப் பட வீடியோக்களை வைத்திருந்தவருக்கு அபராதம்

15.7.13

ஆபாசப் பட வீடியோக்களைப் பதிவு செய்து வைத்திருந்த யாழ்ப்பாணம் கரவெட்டி வாசிக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தினால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கரவெட்டி இராஜ கிராமத்தில் சோதனை நடத்திய நெல்லியடிப் பொலிஸார் ஆபாசப் பட வீடியோக்களை வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த பொலிஸார் நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

0 கருத்துக்கள் :