அளவெட்டியில் வெங்காயத்திருடர்கள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

28.7.13

அளவெட்டி வடக்குப் பகுதியிலுள்ள தோட்ட வெளிகளில் இரவு வேளைகளில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறிய வெங்காயத்திற்கு நல்ல கிராக்கி காணப்படும் இக் காலப்பகுதியில் சிறிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வெயிலில் உலரவிடப்பட்டுள்ள நிலையில் இரவு வேளைகளில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டுகின்றனர் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கூட வெங்காயத்தைத் திருடியவேளையில் விவசாயிகளைக் கண்டு திருடர்கள் ஓடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதனால் இரவு வேளைகளில் விவசாயிகள் தோட்ட வெளிகளில் காவலுக்கு இருக்கவேண்டிய நிலை காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :