மனம் திறக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன் கானொளி

28.7.13


எனக்கு அரசியலில் நாட்டம் இல்லை. பணம் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமோ அல்லது தேவையோ எனக்கில்லை. எனது நண்பர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வேண்டுகோள்களுக்கு அமையவே நான் தேர்தலில் களம் இறங்க ஒத்துக்கொண்டேன். முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு நானே காரணம். அரசியலில் ஈடுபடுவதால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுமே தவிர நற்பெயர் ஏற்படப்போவதில்லை. எனினும் என்னதான் நடக்கப்போகின்றது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரம், விடுதலைப் புலிகளின் பிரதிநிதி, இதன் பின்னணியில் இந்தியா மற்றும் சர்வதேச பிரிவினைவாத புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் பலரும் பல விதமாக கூறுகின்றனர். காலம் காலமாக தமிழர்களுடைய நியாயங்களுக்காக யார் போராடினாலும், யார் குரல் கொடுத்தாலும் அவர்களை புலிகள் என்று கூறுவது வழமையே. அவர் அவரின் பார்வையை பொறுத்தே பிறரின் தோற்றப்பாடு தெரியும். ஒருவர் கறுப்பு கண்ணாடி போட்டு பார்த்தால் அது கறுப்பாகத்தான் தெரியும். அதுபோன்றே அமைச்சர்களான சம்பிக்க, பசில் ஆகியோரின் நோக்கும் அமைந்துள்ளது. இதுவரை நான் சர்வதேசத்துடனோ அல்லது இந்தியாவுடனோ எவ்வித தொடர்புகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு எதிராக சில பத்திரிகைகளும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. நான் கொழும்பில் பிறந்தவன் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் குறைகளை அறிய மாட்டேன் என நினைப்பது முட்டாள்தனம். ஆனால் கொழும்பில் இருந்துகொண்டே யாழ். மக்களுக்கு உதவி செய்தவர்கள் பலர். அவ்வாறு நானும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை முதலில் தீர்த்துவைப்பேன் என்றார். http://www.virakesari.lk/article/feature.php?vid=120

0 கருத்துக்கள் :