வெற்றிலைச் சின்னத்தில் கே.பி, தயா மாஸ்டர், தமிழினி?

3.7.13

வட மாகாணசபைத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்களான, கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன், தயா மாஸ்டர், தமிழினி ஆகியோர், அரசதரப்பு வேட்பாளர்களாக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவினால், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டே தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். இவர்கள் மூவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களில் இவர்கள் மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், இவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்தவாரம் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெறுவுள்ளதாவும், னாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழினியின் உறுப்புரிமைக்கு அனுமதி வழங்குவார் என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :