யாழில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

26.7.13


யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
 

0 கருத்துக்கள் :