கொழும்பில் மினி சூறாவளி: பல வீடுகள், வாகனங்கள் சேதம் - ஒருவர் பலி

23.7.13

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. வீதிகளின் குறுக்கே விழுந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி கொழும்பு, நாரஹென்பிட்ட தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அதற்குள் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 39 வயதான நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று (23) காலை வீசிய கடும் காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் மரம் முறிந்து விழுந்தமையின் காரணமாக கப் வண்டி ஒன்றும் மோட்டார் வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.


0 கருத்துக்கள் :