ஓரினச் சேர்க்கை புகார்: அமைச்சர் ராஜினாமா

5.7.13

வீட்டு வேலைக்காரனுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ. தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். இவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக உள்ளவர் ராகவிஜ், இவரது வீட்டில் வேலை பார்த்த ஒருவர் , போலீசில் கொடுத்த புகாரில், அமைச்சர் ராகவிஜ், தனக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி வீட்டு வேலை செய்ய ‌சொன்னதுடன் பல வகையில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
 மேலும் சி.டி. ஒன்றையும் ஆதாரமாக கொடுத்தும் போலீசில் நடவடிக்கை இல்லை எனவும், கூறினார். முன்னதாக இப்புகார் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு சென்றது. அவர் விசாரணை நடத்தி அமைச்சரை ராஜினாமா செய்யும் படி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

0 கருத்துக்கள் :