காதலை ஏற்க மறுத்த மாணவியை பெண் வேடத்தில் சென்று 'ஆசிட்' ஊற்றி கொன்ற வாலிபர்

8.7.13


காதலை ஏற்க மறுத்த கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவியின் அறைக்குள் பெண் வேடத்தில் நுழைந்து அவள் மீது ஆசிட்டை ஊற்றி குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் தினேஷ் சங்லா என்ற மாணவன் முதலாம் ஆண்டில் படித்து வந்தான். அவனுடன் படித்த மீனு சவுத்ரி என்ற பெண்ணை அவன் ஒருதலையாக காதலித்தான். அவனது காதலை ஏற்றுக்கொள்ள மீனு சவுத்ரி மறுத்து விட்டதால் அவனை பழிதீர்க்க அவன் முடிவு செய்தான்.

சம்பவத்தன்று மீனு சவுத்ரி தங்கியிருந்த மாணவிகள் விடுதிக்குள் பெண் வேடத்தில் நுழைந்தான். மீனு சவுத்ரி மீது எதிர்பாராத நேரத்தில் ஆசிட்டை ஊற்றினார். அவர் தப்பியோட முயன்றபோது மடக்கிப் பிடித்து கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொன்றான். ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போன மாணவி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசாரிடம் பிடிபடும் முன்னர் தனது இரண்டு கையின் மணிக்கட்டு நரம்புகளையும் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற தினேஷ் சங்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

0 கருத்துக்கள் :