இருவர் கொலை செய்ய அழைத்து செல்கையில் பொலிஸாரினால் மீட்பு!

4.7.13

முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை கொலை செய்வதற்காக அழைத்து கொண்டு சென்றபோது அவ்விருவரையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மத்துகம பகுதிக்கு அழைத்துச் செல்கையிலேயே வீதி ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் குழுவினரால் இருவரும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பணயக்கைதிகளாக களுத்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய 16 லட்சம் ரூபா கிடைக்கும் வரையில் அந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பிரதேசத்தில் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
16 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொடுக்காவிடின் அவ்விருவரையும் கொலை செய்வதற்கு பாதாள உலக கோஷ்டியினருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :