கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த பெண்

4.7.13

மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாண்டியம்மாள் (45). கணவனை இழந்த பெண்மணியான இவர், இன்று காலை வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு இவரைக் கடித்ததாம்.

உடனே அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிருடன் தூக்கிக் கொண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு வந்துள்ளார். பாம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அவசரக் கோலத்தில் வரும் பெண்மணியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 அடுத்து, மருத்துவரின் மேஜையில் பாம்பைப் போட்டுவிட்டு, தனக்கு மருத்துவம் பார்க்குமாறு பாண்டியம்மாள் கூறவும், மருத்துவர்களுக்கு மயக்கம் வராத குறைதான்.

பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பாம்போ, நாயோ கடித்தால் அதனையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை என்று கூறினர்.

0 கருத்துக்கள் :