பிரபல நடிகை கனகா மரணம்??: நான் நலமாக இருக்கிறேன்.கனகா

30.7.13


பிரபல தமிழ் நடிகை கனகா(40) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகை கனகா சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் இன்று அவர் காலமானார். அண்மையில்தான் அவர் ஆலப்புழாவில் உள்ள அனாதைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றில் புற்று நோய் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாயின. சினிமாவில் பணமும், புகழும் சம்பாதித்தவர், காந்த கண் அழகால் ரசிகர்களை கட்டிப் போட்ட கனகாவின் மரணம் அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா தகவல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகை கனகா, மரணமடைந்து விட்டதாக சற்று முன்னர் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், தாம் நலமாக இருப்பதாக உருக்கமுடன் அவர் தெரிவித்துள்ளார். நடிகை கனகா குறித்த செய்தி வெளியானதும், அவரது சித்தப்பா ராம ஈஸ்வர லால் அதனை மறுத்தார். அதே சமயம் சென்னை ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குள் கனகா கதவை உள்பக்கமாக பூட்டியபடி இருந்துகொண்டிருப்பதாகவும், எவ்வளவோ கூப்பிட்டும் வெளியே வர மறுப்பதாகவும் அவர் ஊடகங்களை தொடர்பு கொண்டு கூறினார். இதுகுறித்த தகவலால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கனகாவின் வீடு முன்னர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நலமாக உள்ளதாக கூறிய அவர், மரணமடைந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து வேதனை தெரிவித்தார். கேரளாவில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்கவே தாம் அங்கு சென்றதாகவும், தமக்கு புற்று நோய் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :