நடத்தையில் சந்தேகம்! கணவரை வெட்டிக்கொன்ற மனைவி!

3.7.13

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

வையம்பட்டி அருகிலுள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த அருளப்பன் மகன் சாமிநாதன் (50). இவரது மனைவி ஜோஸ்பின் சகாயராணி (45).

மது அருந்தும் பழக்கம் உடைய  சாமிநாதன், தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்தாராம். செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு செய்ததால்  வீட்டிலிருந்த அரிவாளால் கணவரை வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வையம்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றினர். தொடர்ந்து ஜோஸ்பின் சகாயராணியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துக்கள் :