போரில் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி! வலிகள் எனக்குத் தெரியும்!- ஆனந்தி எழிலன்

30.7.13


நடந்து முடிந்த போரில் பெரு­ம­ளவு பெண்­களும் சிறு­வர்­க­ளுமே பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள். யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால், பாதிக்­கப்­பட்­டுள்ள இவர்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு அமைப்பு ரீதி­யா­கவோ, அர­சியல் ரீதி­யா­கவோ சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. எனவே, அவர்கள் சார்­பாக மாகாண மட்­டத்தில் குரல் கொடுப்­ப­தற்­கா­கவும், அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கா­க­வுமே நான் இந்த மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன் என்று யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­கின்ற ஒரே­யொரு பெண் வேட்­பா­ள­ரா­கிய ஆனந்தி சசி­கரன் தெரி­வித்தார். விடு­த­லைப்­பு­லி­களின் முன்னாள் திரு­கோ­ண­மலை அர­சி­யல்­துறை பொறுப்­பாளர் எழி­லனின் மனை­வி­யா­கிய ஆனந்தி சசி­கரன் கிளி­நொச்சி கச்­சே­ரியில் பணி­யாற்றி வந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தேர்தல் குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போரில் கண­வனை இழந்த பெண்கள், இறு­திப்­போரில் சர­ண­டைந்த ஆண்­களைக் கொண்ட குடும்­பங்­களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அந்தக் குடும்­பங்­களைச் சேர்ந்த பிள்­ளைகள் போர் முடிந்த பின்பும் மிகு­ந்த கஷ்­டங்­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளது பாது­காப்பு, குடும்பப் பொரு­ளா­தாரம், வாழ்­வா­தாரம் என பல­த­ரப்­பட்ட வழி­களில் பல்­வேறு சிர­மங்­க­ளையும் கஷ்­டங்­க­ளையும் அவர்கள் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள். ஆயினும் இவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு இதுநாள் வரை­யிலும் உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. போரினால் பாதிக்­கப்­பட்ட பெண்­களில் நானும் ஒருத்தி என்ற வகையில் அவர்கள் அனு­ப­விக்­கின்ற வேத­னைகள் வலிகள் துன்ப துய­ரங்கள், நெருக்­க­டிகள் என்­ப­வற்றை நான் நன்கு உணர்வேன். இந்தப் பெண்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு மாகாண மட்­டத்தில் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சிப்பேன்.. அது முடி­யா­விட்டால், அதனை தேசிய மட்­டத்தில் தீர்வு காண்­ப­தற்கு மாகாண சபையின் ஊடாக முயற்சிகளை மேற்­கொள்வேன். அதேநேரம் இந்தப் பிரச்­சி­னையை சர்­வ­தேச மயப்­ப­டுத்தி அதற்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் நான் மேற்­கொள்வேன். என்னைப் போன்­ற­வர்­க­ளுக்கு அர­சியல் புதி­துதான். இல்­லை­யென்று சொல்­வ­தற்­கில்லை. ஆனால் பெண்கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்குப் பெண்­களே தீர்வு காண வேண்­டி­யி­ருக்­கின்­றது. வேறு யாரா­வது எங்­க­ளு­டைய பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பார்கள். அதற்­காக அவர்கள் பாடு­ப­டு­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை நாங்­களே கையாள வேண்டும். அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு நாங்­களே முகம் கொடுக்க வேண்டும். என­வேதான் நான் இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வந்­துள்ளேன் என்றார் ஆனந்தி சசி­கரன். இறுதி யுத்­தத்தின் பின்னர் வட்­டு­வாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த இவரது கணவன் எழிலன் என்ற சசிகரன், அதற்குப் பின்னர், அவர் எங்கு இருக்கின்றார், எப்படி இருக்கின்றார் என்ற தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை. இதனால், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :