புலிகளுக்கு உதவியதை ஒப்புக்கொண்டார் கனேடியத் தமிழர் சுரேஸ்

3.7.13


விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா. 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இவர் உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில்,கடந்த 2006ஆம் ஆண்டு சசுரேஸ் சிறீஸ்கந்தராஜா கைது செய்யப்பட்டார். நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, நேற்று பிற்பகல் முற்படுத்தப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டபோது,அவர் தன்மீதான குற்றச்சாட்டைஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, ஏற்கனவே சிறையில் இருந்து வருவதால், அவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட வாயப்புகள் உள்ளன என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

0 கருத்துக்கள் :