புறாவுடன் போட்டோ எடுக்க பர்மிஷன் வாங்கிய நடிகர்

24.7.13


புறாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மிருக வதை தடுப்பு அமைப்பிடம் அனுமதி வாங்கினார் ரமேஷ் அரவிந்த். பஞ்சதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த். இவர் கன்னடத்தில் ‘மகாசரணா ஹரலயா‘ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார்.

 இதில் முதியவர் வேடத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். இப்படத்துக்காக சமீபத்தில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. புறா ஒன்று அவரது உள்ளங்கையில் அமர்ந்திருப்பதுபோல் போஸ் தர வேண்டி இருந்தது. ஷூட்டிங்கில் விலங்கு, பறவைகளை பயன்படுத்த வேண்டுமென்றால் மிருக வதை தடுப்பு அமைப்பிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி உள்ளது.

 அதனால் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக இந்த அமைப்பிடம் ரமேஷ் அரவிந்த் அனுமதி பெற்றார். இதுபற்றி அவர்கூறும்போது, புறா என் கையில் அமர்ந்திருப்பது சாதாரண படம்தான். ஆனாலும் சட்டம் என்றால் சட்டம்தான். எனவே பட குழுவினர் இந்த புகைப்படம் எடுப்பதற்காக முறைப்படி அனுமதி பெற்றார்கள்.

தொடர்ந்து பட குழுவினர் மிருகவதை தடுப்பு அமைப்பிடம் தொடர்பில் இருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன் முறைப்படி எல்லா சான்றிதழும் அவர்களிடம் பெறுவார்கள் என்றார்

0 கருத்துக்கள் :