யாழ். அராலியில் இராணுவ மேஜர் மர்மமான முறையில் மரணம்

22.7.13


யாழ். மாவட்டத்தில் அராலி இராணுவ முகாமில் கடமைபுரியும் மேஜர் தர இராணுவ அதிகாரி ஒருவர் நேற்றுக் காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் குறித்த இராணு பொறுப்பதிகாரி, முகாமுக்குள் படுக்கைக்குச் சென்றுள்ளார். நேற்றுக்காலை சிப்பாய் ஒருவர், மேஜருக்கு தேநீர் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், படுக்கையில் மூச்சின்றிக் கிடந்த மேஜரைக் கண்டதும்,சிப்பாய் ஏனைய படைவீரர்களுக்கு இதுபற்றி அறிவித்தார். உடனடியாக அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். மேலதிக இழைய பரிசோதனைகளுக்காக உடற்கூறுகள் சில கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அம்பன் பொல, மாம்பிட்டி கலட்ட வீதியைச் சேர்ந்த மேஜர் ஹேரத் முதியான்சலாகே சமந்த ஹேரத் (வயது 38) என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்

0 கருத்துக்கள் :