இலங்கைக்கு பிரித்தானியா எச்சரிக்கை

21.7.13


இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபடாது, தொடர்ந்தும் உரிமை மீறல்கள் இடம்பெற்றால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரின் பின்னரான நல்லிணக்க மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளர் அலிஸ்டர் பெர்ட் தெரிவித்துள்ளார். இரண்டு விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை தெளிவாக வலியுறுத்தி வருகின்றோம். வட மாகாணசபைத் தேர்தல் நீதியானதாக நடைபெற வேண்டும். மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலைமைகளில் மாற்றமில்லாவிட்டால் மீண்டும் இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :