சீன பெண்ணின் ஐபோனில் மின்சாரம் தாக்கியதால் பலி

16.7.13

சீனாவில் பெண் ஒருவர் ஐபோனை சார்ஜ் செய்யும் போது பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் மா என்ற பெண் (23) . இவர், சீனாவின் விமான சேவைநிறுவனத்தில் பணிப் பெண்ணாக பணி புரிந்து , பின்னர் இராஜினாமா செய்துள்ளார்.

மா தன் ஐ போனை சார்ஜ் செய்வதற்காக, மின் இணைப்புடன் இணைத்திருந்துள்ளார். அப்போது அதில் அழைப்பு வரவே மின் இணைப்பைத் துண்டிக்காமல், அப்படியே பேசியுள்ளார்.

அதன்போதே எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அதே இடத்திலேயே மா உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே அப்பிள் நிறுவனம் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, டுவிட்டர் இணையதளத்தில் மாவின் சகோதரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அப்பிள் நிறுவனம் எல்லாவிதமான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மின்சாரம் பாய்ந்தது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

0 கருத்துக்கள் :