யாழில் மணப் பெண் தேடும் மேர்வின் சில்வா

14.7.13

யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா ‘யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்’ என பொது மக்களிடம் கோரியுள்ளார்.
யாழ்.குருநகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘யாழ் மாவட்டத்திற்கு நான் பல தடைவகள் வருகை தந்திருக்கின்றேன். இந்த முறை நான் வருகை தந்தததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.
எனது பழைய நண்பர்கள், நான் திரிந்த இடங்கள் எல்லாம் சுற்றி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிருக்கின்றது. எனக்கு யாழை விட்டு போகவே விருப்பவில்லாமல் இருக்கின்றது. இதனால் எனக்கு இங்கு ஒரு ‘ மணப்பெண் தேவை’ என்று அவர் கோரிக்கை விடுத்ததோடு ‘ என்னைக் கண்டு நீ வாழ உன்னைக் கண்டு நான் இன்பம் பொங்கும் இன்பத்தீபாவளி’ என்ற பாடலைப் பாடி அங்கு கூடியிருந்த மக்களை மகிழ்வித்துள்ளார்.

0 கருத்துக்கள் :