கண்ணிவெடியில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

14.7.13

கண்ணிவெடி அகற்றியபொழுது படுகாயமடைந்த தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை காலை கண்ணிவெடி அகற்றியபோது வெடிபொருள் வெடித்ததில் கலொறெஸ்ற் நிறுவன பணியாளரான ஜேம்ஸ் லியோ (வயது 21) என்பவர் படுகாயமடைந்தார்.

இவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இந் நிலையில் இன்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.

0 கருத்துக்கள் :