குடும்ப மோதல் : 77 வயது மூதாட்டி அடித்துக்கொலை

14.7.13

கெக்கர்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 77 வயது மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவத்தில் மணிவேல் பழனியம்மாள் என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அறிந்து அவ்விடத்திற்கு வந்த பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளனர். அதில் ஒரு ஆசிரியையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :