போலீசார் அதிர்ச்சி! 47 பேர் கைது!4 லாரிகளில் கட்டுக்கட்டாக பணமும், ஏராளமான தங்க நகைகளும்

2.7.13

மும்பையில் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில், 4 லாரிகளில் ரூ.2500 கோடி பணமும், ஏராளமான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, 4 லாரிகளில் கட்டுக்கட்டாக பணமும், ஏராளமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 47 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையின் புறநகர் பகுதியில் இருந்து மும்பை மத்திய ரயில்வே நிலையத்துக்கு அந்த லாரிகளில் பணம் கொண்டுவரப்பட்டு, அவை அகமதாபாத்துக்கு குஜராத் விரைவு ரயில் மூலமாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த சோதனையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். லாரிகளில்  இருந்த பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

0 கருத்துக்கள் :