4 வயது சிறுமி கடத்தி, கற்பழித்து கொலை: 50 கத்திக்குத்து காயங்களுடன் சடலம் கண்டுபிடிப்பு

11.7.13

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவின் கோமதி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த திங்களன்று காணாமல் போனாள். இந்நிலையில், அந்த சிறுமி, உடலில் 50-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்களுடன் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஒரு மறைவிடத்தில் கிடந்தாள்.

அவளது உடலை சுற்றிலும் நாய்கள் நின்று கொண்டிருப்பதை
 நேற்று போலீசார் கண்டுபிடித்தனர்.

உடனே சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அவள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மிக கடுமையான கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்திருப்பதை அந்த பிரேத பரிசோதனை உறுதிபடுத்தியது.

இதை செய்த அடையாளம் தெரியாத சில கல் நெஞ்சக்காரர்கள் மீது கொலை, கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு லக்னோ சிறப்பு புலனாய்வு போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்

0 கருத்துக்கள் :