14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்

21.7.13

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும், விடுதியில் தங்கியிருந்ததும் அவனது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை மிரட்டி விசாரித்த போது, தனது 22 வயது ‘ஆசை நாயகி’யுடன் கஞ்சா போதையில் ஓட்டலில் தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டான்.
அந்த பெண்ணுடன் எப்படி உனக்கு தொடர்பு ஏற்பட்டது ? என்று கேட்ட போது ‘ஒருநாள் அந்த பெண் என்னை வற்புறுத்தி அவளது வீட்டு தோட்டத்தில் தனியாக இருந்த கூடாரத்திற்கு அழைத்துச் சென்றாள்.

என்னை, வற்புறுத்தி, ஆடைகளை கழற்றி தனது ஆசைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டாள்.
இப்போது நீ அனுபவித்த சுகம் உனக்கு தொடர்ந்து தேவைப்பட்டால், பணத்தோடு என்னை தேடி வா.. உனக்கு தேவையானதை நான் தருகிறேன் என்று அந்த பெண் கூறினாள்.

அவள் கூறியதற்கு ஆசைப்பட்டு சித்தியின் கிரெடிட் கார்டை திருடி செலவழித்தேன்’ என்று சிறுவன் உண்மையை ஒப்புக் கொண்டான்.
இதனையடுத்து, போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாட்டாலி வில்லியம்ஸ் என்ற அந்த பெண்ணை கைது செய்த போலீசார், டீஸ்சைட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சிறுவனை தனது ஆசைக்கு இரையாக்கிக் கொண்ட குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கிறேன்’ என்று தீர்ப்பளித்தார்.

0 கருத்துக்கள் :