13ஆம் திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

13.7.13

13ஆம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அல்லது அதனை அமுல்படுத்தக்கூடாது என தடை உத்தரவு விதிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் நலன்புரி தொடர்பான அறக்கட்டளை ஒன்றின் தலைவரான நீர்கொழும்பைச் சேர்ந்த பத்மப்பிரிய சிறிவர்தன இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் மக்கள் ஆணை நீதிமன்றில் சுயாதீனத்தன்மை போன்வற்றுக்கு குந்தகம் ஏற்படும்.
அனைத்துப் பிரஜைகளும் சமமானவர்கள் என்ற அரசியல் அமைப்பின் அடிப்படை ஷரத்துகள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மீறப்பட்டுள்ளது.
13ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ஏழு பேரைக் கொண்ட நீதியரசர்களினால் செய்யப்பட்ட பரிந்துரைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, 13ஆம் திருத்தச் சட்டம் நாட்டில் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாக கருதப்பட முடியாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :