12 பெண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலி:இந்தோனேசியா

15.7.13

இந்தோனேசியாவில் குத்துச்சண்டை போட்டி அரங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர்.
கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள பப்புவா மாகாணத்தின் நபிரே நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் கோப்பை குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது.

போட்டியின் இறுதியில் ஒருவர் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். ஆனால், தோல்வியடைந்த குத்துச்சண்டை வீரரின் ஆதரவாளர்கள் நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நாற்காலிகளையும், பாட்டில்களையும் அவர்கள் மேடையை நோக்கி வீசினர். வெற்றி பெற்றவரின் ஆதரவாளர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இதனால், போட்டியை பார்க்க வந்த சுமார் 2 ஆயிரம் ரசிகர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறுவதற்காக முன்வாயிலை நோக்கி ஓடினர். ஓடியவர்களில் சிலர் கால் தடுக்கி கீழே விழுந்தனர்.
பின்னால் ஓடி வந்தவர்கள் அவர்களை மிதித்துக்கொண்டு மேலே ஏறி ஓடியதால் 12 பெண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

0 கருத்துக்கள் :