ஒரு நண்டுக் கதையால் வந்த வினை

28.6.13


ஆசிரியர்களை குறைமதிப்பீடு செய்யும் வகையில் வலயக் கல்வி பணிப்பாளர் ஒருவரால் கூறப்பட்ட நண்டுக்கதையால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மாத்தளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை வில்கமுவலாம் பிலிஓய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கல்விவலய பணிப்பாளர் ஒருவர் ஆசிரியர்களை குறைமதிப்பீடு செய்யும் வகையில் கதை ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது 'தாய் நண்டு பிழையான முறையில் ஊர்ந்த போதும் தனது குட்டிகளுக்கு சொல்லுமாம் நேரே நடந்து வரும்படி..." என்ற கதையினாலே குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் தம்மை திருத்திக்கொள்ளாது மாணவர்களை திருத்த முயற்சிக்கின்றனர் என குறித்த கல்வி வலய பணிப்பாளர் தனது உரையில் குறிப்பிட்டிருந்ததாகவும் இதனை வாபஸ் பெற வேண்டும் என கோரியுமே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :