பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்த பேராசிரியர் சிவானந்தன்.

9.6.13

யாழ்ப்பாணத்தின் கிழக்கே கிட்டத்தட்ட பத்து மைல்கள் தொலைவிலுள்ள சாவகச்சேரியில் பிறந்து அங்கேயே வளர்ந்து யாழ் இந்துக் கல்லு£ரியிலும் அதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் தன் கல்வியை முடித்துக் கொண்டு இன்று அமெரிக்காவின் இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிக்க பேராசிரியராகவும் பௌதிகவியற் பிரிவின் நுண்பௌதிகவியற் துறையின் தலைவராகவும் மதிப்பிற்குரிய பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் விளங்குகின்றார்.

இவர் தனது திறமையாலும் கௌரவத்தாலும் அமெரிக்காவில் கல்விகற்கவும் கற்பிப்பதற்குமான வாய்ப்பையும் பெற்றிருந்தார். இவரது வர்த்தகத் துறையிலும் இராணுவத் துறையிலுமான அகச்சிவப்புக் கதிர் (infra-Red) உணரிகளின் கண்டுபிடிப்புக்களின் பயன்பாடுகள் அமெரிக்காவின் வெள்ளைமாளிகையினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவர் குடியேறிய திறமையாளரகளின் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் அதி திறமையாளர்கள் வரிசையில் மாற்றத்திற்குரிய வெற்றியாளன் (Champion of Change) என கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது, அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவது, மற்றும் அமெரிக்காவை உலகத்தரத்திற்கு உயர்த்துவது என்ற ரீதியில் இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
குடியேறிய மக்கள் அமெரிக்காவின் நீண்ட வரலாற்றில் அமெரிக்காவைச் செல்வம் கொழிக்க வைத்ததோடு மிக நவீனமயப்படுத்தியும் உள்ளனர். இன்று நாம் கௌரவப்படுத்திக் கொண்டாடும் இவர்கள் மிகச் சிறந்த தொழிலதிபர்களாகவும் மிகச் சிறந்த மக்கள் சேவையாளர்களாகவும் விளங்குகின்றனர்’ என அமெரிக்காவின் தொழில்நுட்ப அதிகாரி டொட் பார்க் கூறியுள்ளார்.
மேலும் ‘தினமும் அமெரிக்காவின் பொருளதாரம் வளர்வதற்குப் பாடுபடும் இவர்கள் பற்றி நாம் மிகவும் பெருமையடைகின்றோம். இவர்களின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இவர்களது பிறந்த ஊரிற்கான சேவையுமே இவர்களது பெருமையை உயர்த்தி உள்ளது’ என்றும் பார்க் கூறியுள்ளார்.
‘எனது கண்டுபிடிப்புக்கள் மூலம் முக்கியமாக இராணுவத்திற்கான மிகக் குறைந்த சக்தி முதலின் மூலம் இருட்டுக்குள் பார்க்கும் திறன் கொண்ட ஒளிக்கருவிகளை (night-vision) உருவாக்கவும் இரசத்தை அடிப்படையாகக் கொள்ளாத மிக அதிக சக்கி வழங்கக் கூடிய சூரியக்கதிர் மின்கலங்களை உருவாக்குவதுமே எனது ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாகும். மிகவும் நுண்ணிய இழைகளைக் கொண்ட கட்மியம் மற்றும் டெலுரிட் கண்ணனாடி நார்கள் மூலம் அதி கூடிய சக்தி வளத்தை உருவாக்கும் நோக்கில் என் ஆராய்ச்சிகள் அமைந்தன’ என்று பேராசிரியர் சிவானந்தன் கூறியுள்ளார்.
இவர் தனது நிறுவனத்தில் 25ற்கும் மேற்பட்ட PHD பட்டம் பெற்ற பட்தாரிகளை ஆராய்ச்சிகளோடு இணைத்துள்ளார். இது உலகளாவிய நவீன கண்டுபிடிப்புக்களில் இவரது நிறுவனம் எதிர்காலத்தில் முன்னோடியாக இருக்க உதவும்.
டொக்டர் சிவானந்தன் சாவகச்சேரி மட்டுவில் தெற்கில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள். வல்வெட்டித்துறையில் பிறந்த இவரது தந்தை தமிழ் மொழியில் பாண்டித்யம் பெற்று ‘பண்டிதர்’ பட்டம் பெற்றவர். இவர் வன்னியிலும் மீசாலையிலும் தனது ஆசிரியப்பணியை ஆற்றி உள்ளார். தாயார் விஞ்ஞானம் மற்றும் சமய ஆசிரியை. பேராசியர் சிவானந்தன் தனது ஆரம்பக் கல்வியை சரஸ்வதி மகாவித்தியாலத்திலும் அதனைத் தொடர்ந்து ட்ரிபேக் கல்லாரியிலும் கற்றுள்ளார். இரவது திறமைகள் இவரது ஊரவர்களாலும் நண்பர்களாலும் பாராட்டப்பட்டுள்ளது. இந்தப் பாராட்டுக்களே இவரது உயர்கல்விக்கான ஊக்கத்தை வழங்கியது. பின்னர் உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லு£ரியில் பயின்றுள்ளார்.
இவர் எட்டுப் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவரது குடும்பத்தில் அனைவரினது உழைப்பும் குடும்பத் தேவைகளிற்காகத் தேவைப்படும் நிலையே இருந்தது. யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து பெரதேனியா விஞ்ஞான பீடத்திற்கு தெரிவானார். இங்கு பௌதிகவியலில் பட்டம் பெற்று ஒரு வருடம் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் கடமையாற்றி உள்ளார்.
1982ம் ஆண்டு அமெரிக்காவின் இலினொய்ஸ் பல்கலைக்கழகத்திற்கு தனது மேற்படிப்பிற்காகத் தெரிவாகி இருந்தார். அங்கு தனக்கு வாய்ப்பாக அகச்சிவப்புக் கதிரகளின் ஆராய்ச்சிக்குரிய நிதிவளம் கிடைத்து என்று பேராசிரியர் சிவானந்தன் கூறுகின்றார். இதுவே தான் இன்று இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தில் வகிக்கும் பதவிக்கு அடித்தளம் இட்டுத் தந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
பேராசிரியர் சிவானந்தன் ‘தமிழ்நெட்’டிற்கு அளித்த செவ்வியில் தான் தமிழ்ச் சமூகம் பொருளாதார நிலையில் முன்னேற்றததைக் காண உதவுவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளிலும் ஏற்கனவே இறங்கி உள்ளார். இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஒரு குழுவொன்றை உருவாக்கி அகச்சிவப்புக் கதிர் உணரிகளின் ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதற்கு பெரதேனியாப் பல்கலைக்கழகம் உட்பட மூன்று பல்கலைக்கழகங்களை இவர் ஒருங்கிணைத்துள்ளார். பேராசிரியர் சிவானந்தன் இம் மூன்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு அடிப்படை அகச்சிவப்புக் கதிர் ஆய்வின் அறிவுக் கட்டமானத்தை உருவாக்கப் பயிற்சிகள் வழங்கி உள்ளார். இதன் மூலம் குறுகியகாலத்தில் இங்கு உற்பத்திகளை மேற்கொண்டு அவர்கள் பொருளாதார வளத்தை முன்னேற்ற முடியும் என்று கூறுகின்றார்.
இவர் ஆய்வுகூட மாதிரியிலான அதி தொழில்நுட்பம் வாய்ந்த அடைகாப்புக் கருவியைத் (Labs-styled incubator) Sivananthan Laboratories, Inc மூலம் உருவாக்கி உள்ளார். அத்தோடு இன்ஸ்பைர் (InSPIRE-  The non-profit Institute for Solar Photovoltaic Innovation, Research, and Edu-training) எனும் இலாபநோக்கமற்ற சூரியக்கதிர்சக்தி மூல ஆய்வு மற்றும் கல்வி மையத்தையும் உருவாக்கி உள்ளார். இதன் மூலம் இலினொய்ஸ் உயர்கல்வி மாணவர்களையும் பட்டதாரிகளையும் மீளமைக்கக் கூடிய சக்தி வங்களையும் சூரிய சக்தியின் பயன்பாட்டுக் கருவிகளையும் உருவாக்க உதவுகின்றார்.

0 கருத்துக்கள் :