பின்லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் யாழ் தமிழன்

1.6.13

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில் அமெரிக்காவிற்கு உதவிபுரிந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தழிழரான சிவலிங்கம் சிவநாதன் என தற்பொழுது தெரியவந்துள்ளது.சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிபபிடத்தக்கது.
 
தற்பொழுது அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகின்ற இவரிற்கு கடந்த 30ம் திகதி அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "சம்பியன் ஒப் சேஞ்"எனப்படும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில் இவர் பிரதானமான ஒருவராக செயற்பட்டுள்ளார்.
அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்த பெருமை இவரையே சாரும்.
 
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில் தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார்.இது தொடர்பில் அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்ப அதிகாரி டோட் பார்க் கூறுகையில் பேராசிரியர் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.
 
சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம் அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர் என;பதும் தற்பொது  அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :