விஷத்தன்மை மிக்க ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : ஐ.நா அறிக்கை

4.6.13

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை கண்காணிக்க ஐ.நா. விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் போர் நிலைமைகளை 5 மாதங்களாக கண்காணித்து வந்த இந்த குழு, நேற்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், சிரியாவுக்கான ஐ.நா. கண்காணிப்புக் குழு தலைவர் பாலோ பின்ஹெப்ரோ தெரிவித்துள்ளதாவது:-
சிரியாவில் அரசு தரப்பில் நடத்தப்பட்ட 4 தாக்குதல்களில் மிதமான அளவிலான விஷத்தன்மை கொண்ட ரசாயணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன.
இந்த ஆதாரங்களின்படி, எத்தகைய ரசாயணங்கள் பயன்படுத்தப்பட்டன? இவை எப்படி பிரயோகிக்கப்பட்டது என்பது தொடர்பாக அறிய முடியவில்லை.
அரசு பயன்படுத்திய ரசாயண ஆயுதங்களை போராளி குழுக்கள் கைப்பற்றி, அவற்றை பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :