பசிபிக் பூகம்ப வளையத்திற்குள் வரும் இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

14.6.13

இந்தோனேசியாவின் ஜாவா தீவிற்கு அப்பால் கடலில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கம் நேற்று இரவு 11.47 மணிக்கு ஏற்பட்டது. இதற்கு தலைநகரில் உள்ள பெரிய கட்டிடங்கள் ஆடின. ஜாவா தீவின் பெரும்பாலான பகுதிகள் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர். இருந்தும் சுனாமி குறித்த எச்சரிக்கை விடப்படவில்லை.
தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து 423 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் 11-வது கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருக்கிறது. ஆஸ்திரேலிய கிறுஸ்துமஸ் தீவுக்கு அருகே 170-வது கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேதாரம் பாதிப்பு குறித்து எந்த செய்தியும் இல்லை. 
பசிபிக் பூகம்ப வளையத்தில் வரும் இந்த பகுதி அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் பகுதியாகும். கடந்த 2004-ம் ஆண்டு இங்கு ஏஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 1,70,000 பேர் உயிரிழந்தனர். அப்போது தான் நமது தமிழக கடற்கரையும் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

0 கருத்துக்கள் :