பிரபாகரன் செய்ய முடியாததை ராஜபக்ச செய்கிறார்-லஷ்மண் கிரியெல்ல

15.6.13


விடுதலைப்புலிகளுடன் நடத்திய போரின் காலக்கட்டத்தில் கூட இலங்கைப் பொருளாதாரம் இவ்வளவு சீரழியவில்லை. பிரபாகரனால் அழிக்க முடியாத இலங்கைப் பொருளாதாரம் ராஜபக்சவினால் அழிக்கப்படுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மண் கிரியெல்ல கடுமையாக ராஜபக்சவை சாடியுள்ளார். எதிர்கட்சியினரால் செயல்படமுடிவதில்லை. மரண வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்லும்போது கூட ஆளும் கட்சியினரின் குண்டர்கள் கல்லை வீசி தாக்குகின்றனர். கொழும்பியிலேயே இப்படியென்றால் யாழ்ப்பாணத்தின் நிலை எப்படி இருக்கும்? என்று அவர் மேலும் கேள்விகள் எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், “முறைகேடான ஆட்சியினால் சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது பொருளாதாரமும் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. விடுதலைப் புலிகளால் சிதைக்க முடியாமல் போன நாட்டின் பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கம் சிதைத்துள்ளது. பொது மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது நாட்டை பாரிய கடன் நெருக்கடியில் அரசாங்கம் சிக்க வைத்துள்ளது.

0 கருத்துக்கள் :