விடுதலைப் புலிகளின் சொத்துகளை சூறையாடும் கோத்தபாய!

25.6.13

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடமையாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
மாவீரர் துயிலும் இல்லங்கள், விடுதலைப்புலிகளின் முகாம்கள் அனைத்தையும் இராணுவ உடைமையாக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
ஏற்கனவே புலிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வாகனங்கள், நிலையான வங்கி வைப்புகள் என்பன அரச உடைமையாக்கப்பட்டடிருந்தன. இந்த நிலையில் புலிகள் பயன்படுத்திய காணிகள், வீடுகள் என்பவற்றை இராணுவ உடைமையாக்க கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் கோப்பாய், கொடிகாமம், எள்ளன்குளம் மாவீரர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய காணிகள் அனைத்தும் பொதுமக்களின் காணிகளே, விடுதலைப்புலிகளின் சொத்துக்களை இராணுவ உடமையாக்குதல் என்ற பேரில் பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதே கோத்தாவின் இந்த திட்டம் என தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :