சமாதானம் பேசி சமாதானம் விரும்பாத ஆட்ச்சியாளனே!

21.6.13

காட்டிக்கொடுத்தவரே வாருங்கள்? உங்கள்
கண்களைத்திறந்து தான் பாருங்கள்
கயவராய் நீங்கள் மாறியதால் இன்று
காடையர் செய்கையை பாருங்கள்


அவர்கள் வீரியம்பேசிடக்காரணம் -நீங்கள்
வி‌ரைந்து  அந்தபோர் செல்லக் காரணம் -நீங்கள்
எட்டப்பன் கதை தனை கேட்டும் அறிந்தும்
எம் இனத் துரோகியாய் ஆனவர் -நீங்கள்


கல்லறைமீது சத்தியம் செய்து-பின்
காட்டி கொடுத்தவர் -நீங்கள்
காசுக்கும் ‌பொருளுக்கும்
கயவர்கள் சேர்கைக்கும்
கல்லறைச் சத்தியம் மறந்தவர்கள்-நீங்கள்


நம்பிய தலைவனை
நம் மக்கள் உணர்வினை
நாச நஞ்சு ஊற்றிக் கொண்டவர் நீங்கள்
நாளைய சந்ததி இழிவாகத் துாற்றிட
வழி ஒன்று செல்பவர் நீங்கள்


உங்கள் செயலால்
காடையர்  கூட்டத்தார்
கடல் தாண்டி வந்திங்கே
சண்டியராகவும் மாறீட்டார்

கண்களை மூடியே
உலகது இருந்திட்டால்
உலகத்தை ஆண்டிடப் போகிறார்
கடன் வாங்கிய மூளை
கடன் வாங்கிய ஆயுதம்
கடிவாளம் இல்லா அரசு
நிலை த்துதான்
ஆட்ச்சி நடத்திடுமா?

பல நாடுகள் இணைந்து
பாடையில் அனுப்பிய எம் உறவுகள்
சாபம்தான் உமை விட்டுடுமா?
           ******ஈழக் கவி**********

0 கருத்துக்கள் :