மாணவி கழுத்தை நெரித்து கொலை : முன்னாள் காதலன் கைது

4.6.13


கிருஷ்ணகிரியில் பரபரப்பு பிளஸ் 2 மாணவி கொலை மாந்தோப்பில் உடல் மீட்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மாந்தோப்பில் கிடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மகள் பவித்ரா (17). ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தார். இந்த ஆண்டு தேர்வு எழுதிய பவித்ரா, 960 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் வீட்டில் பெற்றோருடன் பவித்ரா தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் விசாரித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி,ராயக்கோட்டை சாலையில் உள்ள வேப்பாலப்பட்டி கிராமத்தில், பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி சந்தானபாண்டியன் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விசாரணையில் சடலமாக கிடந்தது மாணவி பவித்ரா என்பது தெரியவந்தது. இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், பவித்ராவின் உடலை பார்த்து கதறியழுதனர். தகவல் அறிந்த மக்கள் அங்கு திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவி கழுத்தை நெரித்து கொலை : முன்னாள் காதலன் கைது

தனது தாயின் அருகில் படுத்து தூங்கிய மாணவி பவித்ராவை காலையில் திடீரென காணவில்லை. இதையடுத்து வழக்கமாக பவித்ரா செல்லும் இடங்களில் எல்லாம் சென்று பெறோர்கள் தேடிப்பார்த்த போது எங்குமே காணவில்லை....
கிருஷ்ணகிரி அருகில் உள்ள மோரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் என்பவரது மகள் பவித்ரா வயது-17, இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 960 மதிப்பெண்கள் பெற்ற பவித்ராகல்லூரியில் சேர முடிவு செய்து இருந்தார்.

நேற்று முன்தினம் தனது தாயின் அருகில் படுத்து தூங்கிய மாணவி பவித்ராவை காலையில் திடீரென காணவில்லை. இதையடுத்து வழக்கமாக பவித்ரா செல்லும் இடங்களில் எல்லாம் சென்று பெறோர்கள் தேடிப்பார்த்த போது எங்குமே காணவில்லை.

இதற்கிடையில், ஆலப்பட்டியை அடுத்த வெப்பாலம்பட்டியில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பவித்ரா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பவித்ராவின் பெற்றோரிடம் மாணவிக்கு யாருடனாவது நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததா ? என்று போலீசார் விசாரித்தனர். கூடவே, மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், கடைசியாக அவர் பேசிய எண்ணையும் போலீசார் கண்காணித்தனர்.

ஏற்கனவே, மாணவிக்கும் சோக்காடி என்ற கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டன் என்பவரது மகன் அசோக்குமார் வயது-20, என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. கடைசியாக அவர் பேசிய செல்போன் எண்ணும் அவருக்கு சொந்தமானது என்பது தெரிந்த போலீசார் உடனடியாக அசோக்குமாரை பிடித்தனர்.

இதையடுத்து சிறப்பு பிரிவு போலீசார் அவரிடம் விசாரனை நடத்தியதில், அவர் தான் பவித்ராவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஆவர் கூறிஇருப்பதாவது.

பவித்ரா 10-ம் வகுப்பு வரை கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். அப்போது அவர் பள்ளிக்கு செல்லும் பஸ்சிலேயே நானும் ஐ.டி.ஐ. க்கு சென்று வந்தேன். இருவரும் ஒரே பஸ்சில் வந்து சென்றதால் எங்களுக்குள் பழக்கம் ஏற்ப்பட்டது, பிறகு அது காதலாக மாறியது. இந்நிலையில் பவித்ரா பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க ஈரோடுக்கு சென்று விட்டார்.

நானும் படிப்பை முடித்து விட்டு ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றேன். அங்கு என்னுடன் வேலை செய்த சத்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுப்பற்றி எப்படியோ பவித்ராவுக்கு தகவல் கிடைத்ததும் அவர் என்னை தொடர்பு கொண்டு நீ என்னை விட்டு விட்டு எப்படி மற்றொரு பெண்ணுடன் பேசலாம் என்று கேட்டால். அதற்கு நான், ஆம்பளை அப்படித்தான் இருப்பேன் என்றேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் பேசுவதை நிறுத்தி விட்டோம்.

இதற்கிடையே பவித்ராவுக்கு எங்கள் கிராமத்தை சேர்ந்த வடிவேல், கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்த கலைப்பாண்டி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் போனிலும் பேசி வந்தார். இதுப்பற்றி எனக்கு தெரியவந்ததும் ஆத்திரம் அடைந்த நான் பவித்ராவுக்கு போன் செய்து நீ எப்படி அந்த வாலிபர்களுடன் போனில் பேசலாம் என்று சண்டை போட்டேன்.

அதற்கு பவித்ரா நீ வேறு பெண்ணுடன் பேசலாம், நான் வேறு வாலிபர்களுடன் பேசக்கூடாதா...? அதை கேட்க நீ யார்...? என்று கேட்டார். இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று பவித்ரா எனக்கு போன் செய்து நீ நள்ளிரவு 12 மணிக்கு என் வீட்டிற்கு பின்னால் வா அங்கு வைத்து நாம் பேசலாம் என்றார்.

இதையடுத்து இரவில் வீட்டில் இருந்த பவித்ரா தனது பெற்றோருடன் டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். பெற்றோர்கள் தூங்கியதும் நள்ளிரவு 12 மணியளவில் பவித்ரா தனது வீட்டின் பின்பகுதிக்கு வந்தார். அங்கு வைத்து பேசினோம். அப்போதும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நான் பவித்ராவை தாக்கி கீழே பிடித்து தள்ளினேன். இதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. நிலைமை சிக்கலாகிவிட்டதல் எனக்கு வேறு வழிதெரியவில்லை, பவித்ராவை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.  பின்னர், பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியபோது, எனது நண்பர் மகபூப்பாஷாவை அழைத்து நடந்த விபரங்களை சொன்னேன்.

அவனும் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்தான். பின்னர் அவன் வண்டி ஓட்ட நான் பின்னால் உட்கார்ந்து கொண்டு பவித்ராவின் உடலை தூக்கி கொண்டு வந்து இந்த மாந்தோப்பில் கொண்டுவிட்டு சென்று விட்டோம்.  பின்னர் நாங்கள் ஊருக்கு சென்று விட்டோம். மறுநாள் நான் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டேன்.

நாமக்கல் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவரான மகபூப்பாஷாவும் காலியில் எழுந்து கல்லூரிக்கு சென்று விட்டார் என்று அசோக்குமார் கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணகிரி போலீசார் மகபூப்பாஷாவை கைது செய்ய நாமக்கல் விரைந்து உள்ளனர்.

0 கருத்துக்கள் :