எனது மகளை கண்டுபிடித்துத் தாருங்கள்! நாமலின் காலில் விழுந்த தாய்

2.6.13

கிளிநொச்சி சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாயொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்றாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச யாழ்.மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டதாரிகள் மாநாட்டில் அதிதியாக கலந்து கொண்டார்.
மாநாட்டை நிறைவு செய்துவிட்டு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடமே  குறித்த தாய் கண்ணீருடன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தனது மகளைக் காணவில்லை எனவும் இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை என்று அந்த தாயார் தெரிவித்தள்ளார்.
இந்த தாயாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நாமல் ராஜபக்ச உடனடியாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

0 கருத்துக்கள் :