சுவிஸ் வங்கியொன்றில் புலிகளின் பணத்தை பறிமுதல் செய்ய அரசு முயற்சி

29.6.13

சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பில்லியன் டொலர் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கு வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
புலிகளின் இராணுவத் தளபதி ஒருவரினால் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடா மற்றும் ஐரோப்பிய புலிகளின் வலையமைப்பினால் திரட்டப்பட்ட பணம் இவ்வாறு சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
எந்த வங்கியில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சுவிட்சர்லாந்து புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக்கு உதவியளித்து வருவதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :