மண்டபம் அகதி முகாமில் பசியால் அலறும் குழந்தைகள்!

2.6.13

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதி முகாமில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த அவலமே இது.
ஈழத் தமிழ் மக்கள் தமிழகத்தில் உள்ள மக்கள் அனுபவித்து வரும் எல்லா சலுகைகளையும் அனுபவித்து வரலாம் என்று ஈழத் தாய் ஜெயா அம்மா சொல்லி நிறைய நாள் ஆகவில்லை.
அதற்குள் நடக்கும் அதிகாரிகளின் கெடுபிடிகளோ உச்சக் கட்டம்.
உடனடி நடவடிக்கை எடுப்பாரா அம்மா?
நடந்தது இது தான்…!
அவுஸ்திரேலியா சென்ற நண்பர்கள் பலரும் இங்கே வந்தால் பிள்ளைகளை நல்ல இடத்தில் படிக்க வைத்து வசதியாக வாழலாம் என்று சொல்லுவதைக் கேட்ட மண்டபம் அகதி முகாம் தம்பதியினர் குடும்பத்தோடு அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டு கர்நாடகா சென்றபோது அம்மாநிலப் பொலிசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
தாய், தகப்பன் மற்றும் ஆறு பிள்ளைகளும் பிடுபட்டு தகப்பனைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆறு பிள்ளைகளுடன் மீண்டும் மண்டபம் முகாமுக்கு வந்த தாய்க்கு காத்திருந்தது அதிர்ச்சி.
கல்நெஞ்சம் கொண்ட தமிழக அரசின் அதிகாரிகள்!
குறித்த குடும்பத்துக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிவாரண உதவிகள் (பணம், பொருள்) அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இதனால் குழந்தைகளுடன் பசியால் கடந்த இரண்டு மாதங்களாக வாடி வருகிறது அந்தக் குடும்பம். பசியால் துடித்து அலறும் குழந்தைகளின் குரலைக் கேட்டு கல்நெஞ்ச அதிகாரிகளின் மனது தான் இன்னும் கரையவில்லை.
முகாமில் உள்ள சில நல்ல உள்ளங்களிடம் அரிசி வாங்கியே பிள்ளைகளுக்கு கஞ்சி ஊற்றி வருகின்றார் குறித்த பெண். பசி ஒரு புறம் இருக்க கியூ பிராஞ்ச் அதிகாரிகளின் கொடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார் குறித்த பெண்.
விசித்திரமான சிறைச்சாலையாக உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள கெடுபிடிகளோ ஏராளம்…

0 கருத்துக்கள் :