பேய் விரட்டுகிறேன் என்று சிறுவனின் கையை கற்பூரத்தீயில் சிதைத்த பெண் கைது

28.6.13

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்த நல்லூர் அருகில் உள்ள தெற்கு மலையடிப்பட்டியை சேர்ந்த கே.பரமசிவன். இவரது மகன் வீரகுமார்(வயது 13).  இவன் திருமலாபுரம் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.  கடந்த மே மாதம் பள்ளி முடிந்து விட்டிற்கு திரும்பியவன் சுடிகாட்டில் நண்பர்கள் சிலரோடு விளையாடிக் கொண்டிருந்திருந்திருக்கிறான்.  அன்று மாலை வீடு திரும்பியவன், பயத்தில் உளறியிருக்கிறான்.

இரவு நேரம் சம்பந்தமில்லாமல் பேசியவன்,  தன்னை யாரோ அழைப்பதாக கூறிக்கொண்டு வீட்டிற் குள்ளேயே அங்கும் இங்கும் ஓடியிருக்கிறான்.  4 நாட்கள் தூக்கமில்லாமல் இப்படி புலம்பிக் கொண்டிருந்தவனை கண்ட தந்தை, ஏதோ கெட்ட ஆவி இவன் மீது குடிபுகுந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தார்.  அருகில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் இருக்கும் குறி சொல்லும் பெண்ணிடம் இவனை அழைத்துச்சென்றுள்ளார்.

அந்தப்பெண் இவனை ஆவி பிடித்திருக்கிறது.  அதை நான் விரட்டுகிறேன் என்று தன் வீட்டின் அறைக்குள் சிறுவனை அழைத்துச்சென்றாள்.   யாரையும் உள்ளே விடவில்லை.

அறையில் சூடத்தை கொளுத்திய அந்தப்பெண், அந்த சிறுவனின் கையை எரியும் பெரிய சூடத்தின் மீது வைத்து 20 நிமிடம் அழுத்தியிருக்கிறார்.  சிறுவன் வலி தாங்காமல் துடித்துள்ளான்.  இது போன்று மூன்று முறை சூடத்தில் வைத்து செய்துள்ளார். சிறுவன் வலியால் துடித்ததும், ஆவி போய்விட்டது என்று சிறுவனின் தந்தையிடம் கூறியிருக்கிறாள்.  இதற்கு கூலியாக ரூ 500 பெற்றிருக்கிறாள்.   மகன் கை படுகாயமடைந்திருப்பதை கண்டு கலங்கிய தந்தை, உடனடியாக பாளை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது.

தந்தையின் புகாரின்பேரில் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

0 கருத்துக்கள் :