மண்டேலாவின் உறுப்புகள் செயற்பாடு குறைந்தது : சிகிச்சையை நிறுத்த குடும்பத்தினர் ஆலோசனை

25.6.13

தென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லாவின் உடல் நிலை மோச­ம­டைந்­துள்­ளதை தொடர்ந்து அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­படும் சிகிச்­சையை நிறுத்­து­வ­தற்கு   அவ­ரது குடும்­பத்­தினர் ஆலோ­சனை செய்­துள்­ளனர்.

தென் ஆப்­பி­ரிக்­காவின் முதல் கறுப்­பின ஜனா­தி­ப­தி­யான நெல்சன் மண்­டேலா (வயது 94) உடல்­நலம் பாதிக்­கப்­பட்டு கடந்த 14 நாட்­க­ளாக பிரிட்­டோ­ரி­யாவில் உள்ள மருத்­து­வ­ம­னையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

நுரை­யிரல் தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்ட அவ­ரது உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது. ஆனால், உயி­ருக்கு ஆபத்து இல்லை என்று டாக்­டர்கள் கூறி வந்­தனர். எனவே, அவர் விரைவில் குணம் அடைவார் என்று அவ­ரது குடும்­பத்­தினர் நம்­பிக்­கையில் இருந்­தனர்.

இந்­நி­லையில், மண்­டே­லாவின் உடல்­நிலை தற்­போது மிகவும் மோச­ம­டைந்­துள்­ளது. அவ­ரது கல்­லீரல் மற்றும் கிட்­னியின் இயக்கம் பாதி­யாக குறைந்­து­விட்­ட­தா­கவும், சில நாட்­க­ளாக கண்­களை திறக்­க­வில்லை என்றும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன

0 கருத்துக்கள் :