மக்கள் பிரபாகரனை சூரியக்கடவுளாகவே அடையாளப்படுத்தி புகழ்ந்து போற்றினார்

21.6.13

பிரபாகரனை சூரியக்கடவுளாகவே வடபகுதி தமிழ் மக்கள் அடையாளப்படுத்தி புகழ்ந்து போற்றினார்கள் என ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் இன்று உயிரிழந்து விட்டார். எனவே அவ்வாறானதோர் அமைப்பு மீண்டுமொரு ஆயுத இயக்கமாக உருவெடுப்பதற்கு இடமே இல்லை. உலகில் உருவாகியதும் இல்லை. இதுவே உண்மை. ஆனால் சிலர் புலிகளின் புதைகுழிகளை தோண்டி அரசியல் நடத்துகின்றனர்.
கொத்தலாவல பாதுகாப்பு நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பின்னர் அங்கு மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ சபையின் அனுமதி கிடைத்துள்ளதா? பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனை எங்குள்ளது என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

நலன்புரிச் சங்கம் என்ற பெயரில் இராணுவ அதிகாரிகளிடமிருந்து பெருந்தொகை அறவிடப்படுவதை இராணுத்தினர் எதிர்க்கின்றனர். அரசியல்வாதிகளின் பிள்ளைகள், ஆசிரியர்களை தாக்குகின்றனர். அரசியல்வாதிகள் தண்டனை வழங்குகின்றனர். சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொலைகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு அதன் நிறுவனங்கள் அனைத்தும் சீரழிந்துள்ளன. 13 ஆவது திருத்தம் மாகாண சபைகள் தொடர்பாக நாட்டில் விவாதம் உருவாகியுள்ளது. எமது படையினரின் அர்ப்பணிப்பில் யுத்தம் வெற்றி பெறப்பட்டுள்ளது. இந்த யுத்தம் பிரபாகரனாலோ அல்லது வேறெந்த சக்திகளாலும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
தமிழ், சிங்கள இனவாதிகள், ஆட்சியாளர்களின் தவறுகள் 1978இன் பின்னர் இந்தியா - புலி பயங்கரவாதத்தை போஷித்தது. ஆயுதம் வழங்கி முகாம்கள் வழங்கி பயிற்சிகளை வழங்கி இந்தியா போஷித்தது. தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

 அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு கறுப்பு கொடி போட்டு எதிர்ப்பை வெளியிட முடியாது போனது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னர் வடபகுதி மக்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை. வடக்கின் மக்களது மனதில் இராணுவம் தொடர்பான எதிர்ப்புத் தன்மை நிலையே உருவாகும் ஆக்கிரமிப்பாளர் என்ற நிலையே உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று யுத்தம் முடிந்தும் வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. பிள்ளைகள் தினமும் காண்பது இராணுவத்தினரை. சிவில் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை விலக்கி முகாம்களில் வைக்கப்பட வேண்டியிருந்தது. ஆளுநர் தொடக்கம் கீழ் மட்டம் வரை அனைத்தும் இராணுவ மயம்.
எனவே யுத்தத்தின் பின்னரும் வடக்கு தமிழ் மக்களை ஆக்கிரமித்து அடக்கும் அதிகாரத்தையே அரசு முன்னெடுக்கிறது. பிரபாகரனை சூரியக்கடவுளாக வணங்கினார்கள்.

தோல்வியடையாத தலைவராக மக்கள் பின்பற்றினார்கள். இன்று பிரபாகரன் அழிந்து விட்டார். எனவே அந்த ஆயுத இயக்கம் மீண்டும் தலைதூக்க எந்த இடமும் கிடையாது.
தனது பிள்ளை யுத்தத்தால் இறந்த இடத்திற்கு சென்று கண்ணீர் அஞ்சலி செய்வதற்கு தாய்க்கு இடமளிக்கப்படுவதில்லை. தடுக்கப்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை.
வடபகுதி தமிழ் மக்களுக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க இடமளிக்காமையினாலேயே அம் மக்கள் பிரிவினைவாதத்திற்கு தள்ளப்படுகின்றனர். கடந்த 4 வருடங்களில் தமிழ் மக்களை பிரிவினைவாதத்திற்கு தள்ளியது அரசாங்கமே ஆகும்.

கொழும்பில் சிங்கள, அரசு  வடபகுதி தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை ஜனநாயகத்தை வழங்கப் போவதில்லையென்ற செய்தியையே பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வழங்கினார். யுத்தத்தின் பின்னரும் அம்மக்களை அடக்குவதால் அம் மக்கள் அந்த மன நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்தொகுதி கல்லூரி திருத்தச் சட்டமூல விவாதத்தின் போதே அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :