தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

19.6.13

லண்டனில் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கை- ஆஸ்ரேலியா இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணிக்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில், இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வலியுறுத்தியும் ஈழத் தமிர்கள் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அங்கு கூடி இருந்த ஆயிரகணக்கான சிங்களவர்கள், ஈழ தமிழர்கள் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை சிங்களவர்கள் வீசியதால் ஏராளமான ஈழ தமிழர்கள் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியபோது ‘ஈழம் வேண்டுமென்றால் இந்தியாவிடம் கேட்க வேண்டியதுதானே?? ஏன் இலங்கையிடம் கேட்கிறீர்கள்?’ என்ற கோஷங்களையும் சிங்களர்கள் எழுப்பினர். எனினும் அங்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக தலையிட்டதால் ஈழத் தமிழர்கள் தரப்பில் உயிர்ச் சேதாரங்கள் தவிர்க்கப்பட்டன. இதனிடையே சிங்களர்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கார்டிஃப் மைதானத்தில் நாளை போராட்டம் நடத்த லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

0 கருத்துக்கள் :