பாகிஸ்தானில் இந்துக்களின் அவலநிலை

30.6.13

பாகிஸ்தானில் 70 லட்சம் இந்துக்கள் இருக்கின்றனர். சிறுபான்மையினரில் பெரிய சமூகமாக இருக்கும் இந்துக்கள் பெரும்பான்மையாக சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் கராச்சி நகரில் புதிததாக அனைத்து இந்துமத உரிமைகள் மன்றம் என்ற ஒரு அமைப்பை கடந்த
 வெள்ளியன்று தோற்றுவித்தனர். அரசியல் சார்பற்ற ஒரு இயக்கமாக செயல்படும் இந்த அமைப்பின் தலைவராக முன்னாள் எம்.பி. கிஷான் சந்த் பர்வானி இருக்கிறார்.

இதுகுறித்து அந்த இந்து மன்றத்தின் தலைவர் மோகன் மஞ்ஜீயானி கூறியதாவது:-
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இரண்டம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் இன ரீதியிலான தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு அநீதி மற்றும் அராஜகங்கள் குறிப்பாய் பெண்களுக்கு எதிராக நடந்து வருவதால் எங்களுக்கு நாட்டிலேயே பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கிறோம்.

இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு வேட்டையாடப்படுகிறார்கள். முடமாக்கப்படுகிறார்கள். இந்துக்களின்
 சிறுமிகள், சொத்துக்கள், கோவில்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுவதால் அவர்கள் மரணபயத்திலேயே வாழ்ந்து
 வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன. மைனாரிட்டியான இந்துக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் நீதிமன்றத்தின்
 நிறுத்தப்படுவதில்லை.

இந்துக்களின் சிறுமிகளுக்கு மதமாற்ற சான்றிதழ் வழங்கப்பட்டு திருமணத்திற்கு வற்புறுத்தப்படுவது குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்துவது கிடையாது. இச்சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் தெரிவித்தால் திருப்பி தாக்கப்படுவோம் என்கிற பயத்தில் இருப்பதால், இது சர்வ சாதரணமாக நடந்து வருகிறது.

எனவே பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் மற்றவர்களின் மீதான கொடுமைகள், அநீதிகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்டவேண்டும். இதுகுறித்து ஒரு விசாரணைக்கமிஷன் அமைத்து இந்துக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அநீதிகள் பற்றி விசாரிக்கவேண்டும்.
இவ்வாறு மோகன் கூறினார்.

0 கருத்துக்கள் :