சுவிஸ்சில் நடைபெற்ற உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு

19.6.13

எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாகஇ தமிழீழ விடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக, தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவு தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பேர்ண் மாநிலத்தில் உள்ள தமிழர் இல்லத்தில் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு  (17.06.2013) நடைபெற்றது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பித்தது. தமிழின உணர்வாளர் மணிவண்ணனின் திருவுருவப் படத்திற்கு திரு. சிவநேசராசா மலர்மாலை அணிவிக்க, வணக்க சுடரினை திரு. உதயபாரதிலிங்கம் ஏற்றி வைத்தார். மலர் வணக்கத்தை திரு. இராஜன் ஆரம்பித்து வைக்க, மக்கள் மலர், சுடர் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பலர் கவிதைகளாக தமது வணக்கத்தைத் தெரிவித்தனர். திரு. நமசிவாயம் அவர்கள், தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களைப் பற்றி சில நினைவுகளை பகிர்ந்தார். இறுதியாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற மணிவண்ணன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு திரையில் காண்பிக்கப்பட்டது. கனத்த இதயங்களுடன், எம் தமிழ் உறவுகள் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி தமிழரின் தாரக மந்திரத்துடன் நிகழ்வை நிறைவு செய்தனர்.0 கருத்துக்கள் :