பேய் விரட்ட வந்த யுவதியை பூசகர் பேயாட்டம்....தப்பி வந்த யுவதி

28.6.13

தனக்கு பிடித்திருக்கும் அசுத்த ஆவியை விரட்ட வந்த யுவதி ஒருவரை, நிரவாணமாக்கி உடல் முழுவதும் எண்ணெய்பூசி தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சம்பவம் பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள 17 வயதுடைய யுவதி ஒருவர், தனக்கு 'களுகுமாரி" என்ற அசுத்த உடம்பினுள் புகுந்துள்ளதாகவும் அதனை விரட்ட வேண்டும் என கோரி அப்பிரதேசத்தில் இருந்த 51 வயதுடைய பூசகர் ஒருவரிடம் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த பூசகர், தினமும் நிர்வாணமாக எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்டினாலேயே அசுத்த ஆவியை விரட்ட முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த குறித்த யுவதியை பல நாட்களாக நிர்வாணப்படுத்தி எண்ணெய் பூசி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழமைபோன்று எண்ணெய் பூசி தேசிக்காய் வெட்ட வேண்டும் என கூறிய பூசகர் தேசிக்காய் வெட்டுவதற்கு முன்னர் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த பூசகர் கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் சமன் மதநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பொல்கஸ்வோவிட்ட சியம்பலாகொட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்திரசிரி பெரேரா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்துக்கள் :