தமிழில் படமாகும் கிரிக்கெட் சூதாட்டம்

1.6.13

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களும், இடைத்தரகர்களும் கைதாகி உள்ளனர். இந்த கிரிக்கெட் சூதாட்டங்களை வைத்து புதுப்படம் தயாராகிறது.

இப்படத்துக்கு 'கிரிக்கெட் ஸ்கேண்டல்' என பெயரிட்டு உள்ளனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரோஸ் வெங்கடேசன் இயக்குகிறார். இவரே கதாநாயகியாகவும் நடிக்கிறார். நாயகனாக கிஷன் ராமச்சந்திரன் நடிக்கிறார்.

பாரதி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் செந்தில்குமார் தயாரிக்கிறார். இப்படம் குறித்து ரோஸ் வெங்கடேசன் சொல்கிறார். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களின் சூதாட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூதாட்டத்ததை மையமாக வைத்து 'கிரிக்கெட் ஸ்கேண்டல்' படம் தயாராகிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கோடிக்கணக்கான பணம் புரள்கிறது. இதில் ஈடுபடும் சில தரகர்கள் பற்றிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து இப்படத்தை எடுக்கிறேன். கிரிக்கெட் சூதாட்டம் மட்டுமின்றி திருநங்கைகள் சமூகத்தில் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் படத்தில் இருக்கும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது.

மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். நிச்சயம் இப்படத்தை ரிலீஸ் செய்வேன்’’என்கிறார்.

0 கருத்துக்கள் :