கோவில் மணியில் 9 மணி நேரம் தொங்கி உயிர் பிழைத்த ஓட்டல் அதிபர்

24.6.13

உத்தரகாண்ட் வெள்ளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் இருந்து உயிர் தப்பிய பலர், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி தாங்கள் உயிர் பிழைத்த அதிசயத்தை பற்றி பேட்டியளித்து வருகின்றனர்.
கேதர்நாத் கோயிலின் அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் கங்கா சிங் பண்டாரி. கேதர்நாத்தில் கரை புரண்டோடிய வெள்ளத்தில் இவரது ஓட்டல் அமைந்திருந்த 3 மாடி கட்டிடம் அடித்துச் செல்லப்பட்டது.
மூன்றாவது மாடியில் இருந்து தண்ணீரில் குதித்த கங்கா சிங் பண்டாரி வெள்ளம் போன போக்கில் மிதந்துச் செல்ல தொடங்கினார். கேதர்நாத் கோயிலின் மீது வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது கோயில் மாடத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியை பிடித்துக்கொண்டு கழுத்தளவு தண்ணீரில் சுமார் 9 மணி நேரம் தொங்கிய தனது துயர அனபவத்தை அவர் கூறியுள்ளார்.

வெள்ள நீர் பாய்ந்தோடிய வேகத்தில் கோயில் மணியை பிடித்தப்படி தொங்கிக் கொண்டிருந்த எனது ஆடைகள் எல்லாம் பிய்த்துக்கொண்டு போய்விட்டது. வெள்ள நீரில் மிதந்துவந்த பிணங்கள் தனிமையான சூழ்நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனக்கு மரண பீதியை ஏற்படுத்தியது.
காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மணியை 9 மணி நேரம் பிடித்துக்கொண்டு தொங்கியதால் எனது கைகள் ஓய்ந்துப் போய் விட்டன. நல்ல வேளையாக மீட்புப் படையினர் வந்து என்னை காப்பாற்றினார்கள் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :