மீட்புப் பணி தாமதம் : 51,000 பேரின் கதி என்ன?

21.6.13


கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் உத்தராகண்ட் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாக உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களின் நிலை குறித்து கேள்விக்குறியாக உள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்ட இடங்களில் 51,000 சிக்கி தவித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. உத்தராகண்ட் பேரரழிவில் உள்ளூர் மக்களை விட யாத்ரீகர்களாக சென்றவர்களே அதிகம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் வான் வழியாக மட்டுமே மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பல இடங்கள் தீவாக மாறிவிட்டதால் மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உத்தராகண்ட் பேரரழிவுக்கு நாட்டு மக்கள் பெரும் அளவில் நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோசமான வானிலை காரணமாகவே மீட்புப் பணிகள் தாமதம் ஆகி வருவதாக கூறினார். இந்த பேரரழிவிலிருந்து மீள பல மாதங்கள் ஆகும் என்று கூறிய பிரதமர், நிவாரணம் வழங்க நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

0 கருத்துக்கள் :