4 ஆண்டுகளாக விட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 23 வயது பெண்

4.6.13

பெங்களூருவில் 4 ஆண்டுகளாக விட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். இளம்பெண் காதல் புரிந்தார் எனவும், காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், அப்பெண்னை வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பெண்ணை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் மீட்கப்பட்ட இளம்பெண், போதிய உணவு இல்லாமல் உடல் மெலிந்து காணப்பட்டார். மீட்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நிமான்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை அடைத்து வைத்திருந்த பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம்பெண்ணை அடைத்து வைத்தது எதனால் என்பது, போலீசாரின் முழு விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.


0 கருத்துக்கள் :